×

பஞ்சாப் யோகா மாஸ்டருடன் காதல்: ரம்யா பாண்டியன் திடீர் திருமணம்

சென்னை: தமிழில் ரம்யா பாண்டியன் (34), ‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’, ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ ஆகிய படங்களிலும், மலையாளத்தில் மம்மூட்டியுடன் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திலும் நடித்தார். இவர் நடிகர் அருண் பாண்டியனின் சகோதரர், மறைந்த இயக்குனர் சி.துரைபாண்டியனின் மகளாவார்.

கடந்த ஆண்டு யோகா பயிற்சி பெறுவதற்காக, பெங்களூரு வாழும் கலை ரவிசங்கர் ஆஸ்ரமத்தில் இயங்கி வரும் யோகா பயிற்சி மையத்தில் ரம்யா பாண்டியன் இணைந்தார். அங்கு யோகா மாஸ்டர் லோவெல் தவான் என்பவருடன் நட்பு ஏற்பட்டு, பிறகு அவரைக் காதலித்தார். இதையடுத்து அவர்கள் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர். இவர்களின் திருமணம், ரிஷிகேஷில் கங்கை நதி பாயும் கோயிலில், வரும் நவம்பர் 8ம் தேதி நடக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சி, நவம்பர் 15ல் சென்னையில் நடைபெறும்.

The post பஞ்சாப் யோகா மாஸ்டருடன் காதல்: ரம்யா பாண்டியன் திடீர் திருமணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ramya Pandyan ,Chennai ,Ramya Pandian ,Mammootty ,Arun Pandian ,C. Durai Pandian ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!