×

தொழில், வியாபாரங்களில் லாபங்கள் ஏற்படுத்தும் லட்சுமி நாராயண ஹோம பூஜை!!

உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் வாழ்விலும் செல்வம் என்பது இன்றியமையாததாக இருக்கிறது. என்ன தான் கடினமாக உழைத்தாலும் பெரும்பாலானோருக்கு பணத்தின் தேவையும், சொகுசான வாழ்க்கை வாழ்வதற்கான தீராத விருப்பமும் இருக்கத்தான் செய்கிறது. நமது கலாச்சாரத்தில் மனிதர்களின் சுகங்கள் மற்றும் செல்வ வளமைக்கு காரகத்துவம் பெற்ற தெய்வங்களாக நாராயணன் எனப்படும் மகாவிஷ்ணு மற்றும் லட்சுமி தேவி குறிப்பிடப்படுகிறார்கள். அந்த லட்சுமி தேவி சமேதமாக இருக்கும் லட்சுமி நாராயணரின் அருளைப் பெற்று தரும் லட்சுமி நாராயண ஹோம பூஜையின் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இந்த லட்சுமி நாராயண ஹோமத்தை பௌர்ணமி மற்றும் இதர சுப முகூர்த்த நாட்களில் வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்துகொள்ளலாம். கோயில்களில் செய்வது பலன்களை விரைவாகவும்,, மிகுதியாகவும் தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக இந்த லட்சுமி நாராயண ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது. ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி, மஞ்சள், குங்குமம் போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது. இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த ஹோம சாம்பல் மற்றும் பிரசாத மஞ்சள், குங்குமம் போன்றவற்றை தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.

இந்த லட்சுமி நாராயண ஹோம பூஜை செய்து கொள்பவர்களுக்கு வாழ்வில் நிலையான வருமானம் மற்றும் தொழில், வியாபார போன்றவைகளில் மிகுந்த லாபங்கள் ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் தடைகளை நீக்கும். ஜாதகத்தில் எந்த ஒரு கிரகத்தின் தோஷங்கள், பாதகமாக திசாபுக்திகள் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை தடுத்து நன்மைகளை உண்டாக்கும். நமது உடல், மனம், ஆன்மாவில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்கி, தெய்வீக சக்திகளை நிலைபெறச் செய்யும். நேரடி மறைமுக எதிரிகளின் தொல்லை, துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் போன்றவற்றை முற்றிலும் ஒழிக்கும்.


Tags : Lakshmi Narayan Homa ,
× RELATED இந்த வார விசேஷங்கள்