×

சாதிப்பெயரை சொல்லி திட்டி அவமானப்படுத்தியதாக ஏர் இந்தியா நிறுவன உயரதிகாரிகள் 6 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: முன்னாள் சீனியர் மேலாளர் புகார் மீது நடவடிக்கை

சென்னை: சாதி பெயரை சொல்லி திட்டியதாக ஏர் இந்தியா நிறுவன உயர் அதிகாரிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் ஏர்இந்தியா விமான நிறுவன சீனியர் மேலாளராக பணியாற்றியவர் விமல் ராஜசேகரன். திருச்சியை சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இவர், கடந்த 2019ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றியபோது, ஏர்இந்தியா நிறுவன பொது மேலாளர் வேல்ராஜ், மண்டல இயக்குனர் ஹேமலதா, உதவி பொது மேலாளர்கள் கண்ணன் முரளி, சுப்பிரமணியன் குட்டன், (நிர்வாகம்) ஆனந்த் ஸ்டீபன், லையேசன் ஆபீசர் சத்யா சுப்பிரமணியன் ஆகிய 6 பேர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும், தாழ்த்தப்பட் இனத்தை சேர்ந்தவர் என இழிவுபடுத்துதல், அதிக பணிச்சுமை மற்றும் ஜாதி பெயரை கூறி விமல் ராஜசேகரனை அவமானப்படுத்துதல் உள்பட பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து ராஜ சேகரன் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளார். தங்கள்மீது விமல் ராஜசேகரன் தொடர் புகார் கொடுத்ததால், அவருக்கு 6 உயர் அதிகாரிகளும் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அதிகாரிகள், கடந்த ஆண்டு விமல் ராஜசேகரனை நிரந்தரமாக பணிநீக்கம் செய்துவிட்டனர்.இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசில் கடந்த சில மாதங்களாக விமல் ராஜசேகரன் புகாரளித்துள்ளார். இந்நிலையில், விமல் ராஜசேகரன் அளித்த புகார்களின்பேரில் சென்னை விமான நிலைய போலீசார் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, விமல் ராஜசேகரனை ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி, பல்வேறு நெருக்கடி மற்றும் கடும் மனஉளைச்சலை கொடுத்ததாக ஏர்இந்தியா நிறுவனத்தின் 6 உயர் அதிகாரிகள் மீது தீண்டாமை தண்டனை சட்டப்பிரிவுகள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு தண்டனை சட்டம் 2015ன்படி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கும் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். …

The post சாதிப்பெயரை சொல்லி திட்டி அவமானப்படுத்தியதாக ஏர் இந்தியா நிறுவன உயரதிகாரிகள் 6 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: முன்னாள் சீனியர் மேலாளர் புகார் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Air India ,Chennai ,Dinakaran ,
× RELATED விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8...