×

சரத்குமார், சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்புசீவி

சென்னை: ஹரிகுமார் நடித்த ‘திருத்தம்’, சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’, சசிகுமார் நடித்த ‘எம்ஜிஆர் மகன்’, விஜய் சேதுபதி நடித்த ‘டிஎஸ்பி’ ஆகிய படங்களை இயக்கியவர், பொன்ராம். தற்போது அவரது இயக்கத்தில் உருவாகும் படம், ‘கொம்புசீவி’. சரத்குமார், சண்முக பாண்டியன், காளி வெங்கட் உள்பட பலர் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ெவளியிட்டுள்ள பொன்ராம், ‘கடந்த 1996ல் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வைகை அணை ஆகிய பகுதிகளில் நடந்த கதைகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டரில், காவல்துறையைச் சேர்ந்தவர்களை சிறையில் அடைத்துவிட்டு, அவர்களின் துப்பாக்கியை சண்முக பாண்டியன் ஏந்தி நிற்கிறார். அவர்களுக்கு நடுவே கையில் லத்தியை வைத்துகொண்டு சரத்குமார் அமர்ந்துள்ளார். பர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

The post சரத்குமார், சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்புசீவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sarathkumar ,Shanmuga Pandian ,CHENNAI ,Ponram ,Harikumar ,Thirutham ,Sivakarthikeyan ,Varutthaatha Walibar Sangam ,Rajinimurugan ,Seemarajah ,Sasikumar ,MGR Makan ,Vijay Sethupathi ,Shanmuga ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வாலிபரை விரட்டிச்சென்று சரமாரி கத்தி...