×

லப்பர் பந்து வெற்றிக்கு என்ன காரணம்? ஹரீஷ் கல்யாண்

சென்னை: பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன் குமார் தயாரிப்பில் வெளியான படம், ‘லப்பர் பந்து’. தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கிய இதில் ஹரீஷ் கல்யாண், ‘அட்ட கத்தி’ தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பாலசரவணன், டிஎஸ்கே, ஜென்சன் திவாகர், தேவதர்ஷினி நடித்திருந்தனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைத்திருந்தார். விழாவில் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது: தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்தபோது, அவர்கள் அடைந்த உற்சாகத்தை பார்த்து படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தோம்.

படம் ஹிட்டாகும் என்று முன்பே தெரியும். ஆனால், இவ்வளவு பெரிய ஹிட்டாகும், ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த பெருமை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவையே சேரும். தியேட்டரில் பார்க்கும்போது, விஜயகாந்த் சாரின் ஆசி எங்களுக்கு எவ்வளவு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இதுவும் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாறு ஹரீஷ் கல்யாண் பேசினார். எஸ்.லஷ்மன் குமார், ஏ.வெங்கடேஷ், சுவாசிகா விஜய், டிஎஸ்கே, ஜென்சன் திவாகர், தமிழரசன் பச்சமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post லப்பர் பந்து வெற்றிக்கு என்ன காரணம்? ஹரீஷ் கல்யாண் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Harish Kalyan ,CHENNAI ,Prince Pictures ,S.Lashman Kumar ,Tamilarasan Pachamuthu ,Atta Kaththi ,Dinesh ,Swasika Vijay ,Sanjana Krishnamurthy ,Kali Venkat ,Balasaravanan ,DSK ,Jenson Diwakar ,Kollywood News ,Kollywood ,
× RELATED ஹரீஷ் கல்யாணின் டீசல் படத்தில் கானா ஸ்டைலில் பீர் சாங்