அண்ணாநகர்: சென்னை காட்டுப்பள்ளியில் இருந்து ராட்சத இரும்புகளை ஏற்றிக்கொண்டு சென்னை அருகே ஊரப்பாக்கத்துக்கு லாரி ேநற்று அதிகாலை 3 மணியளவில் சென்றது. முகப்பேர் பைபாஸ் ரோடு பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்றுக்கொண்டிருந்த மற்றொரு லாரி மீது வேகமாக மோதியது. இதில், அந்த லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் சந்தானம் (35) படுகாயம் அடைந்தார். லாரியில் இருந்து இரும்பு சாலையில் விழுந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் அங்கு விரைந்து வந்து படுகாயமடைந்த டிரைவரை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. …
The post முகப்பேரில் அதிகாலை பரபரப்பு சாலையில் நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து: தலைகுப்புற கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.
