×

மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக வரும் 22ம்தேதி ஆர்ப்பாட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

சென்னை: சென்னை அண்ணா சாலையில் இந்தியா கூட்டணி சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த நாள் முதலே தேச தலைவர்களின் பெயர்களை மறைப்பதையும், வரலாற்றை மாற்றி எழுதுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அதன் வெளிப்பாடாகவே தற்போது 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியுள்ளனர். காந்தியின் மீது பிரதமர் மோடிக்கு இருக்கும் வன்மம் இன்னும் தீரவில்லை. இப்படியே விட்டால், ஒரு நாள் இரவு திடீரென தோன்றி, ‘இனி காந்தி படம் போட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்று கூட ஒன்றிய பாஜ அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து வரும் 22ம்தேதி திமுகவும், 23ம்தேதி இடதுசாரி கட்சிகளும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளன. தமிழகத்தில் பாஜவின் கனவு ஒருபோதும் பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : DMK ,BJP government ,Mahatma Gandhi ,R.S. Bharathi ,Chennai ,Anna Salai, Chennai ,India Alliance ,Tamil Nadu Congress ,Selvapperundhakai ,Modi ,
× RELATED பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை...