×

ஓட்டலுக்குள் அத்துமீறி நுழைந்த 2,000 பேர்: ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

ஐதராபாத்: ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடித்துள்ள ‘தேவாரா’ படத்தின் விழா ஐதராபாத்தில் ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. இந்த ஓட்டலில் 500 முதல் ஆயிரம் பேர் வரை மட்டும் கலந்துகொள்ளலாம். ஆனால் விழாவை பற்றி அறிந்து ஏராளமான ரசிகர்கள் ஓட்டல் வளாகத்தில் கூடினார்கள். பிறகு திடீரென பாதுகாவலர்களை மீறி, விழா நடைபெறும் அரங்கிற்குள் நுழைந்துவிட்டனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டல் அரங்கிற்குள் நுழைந்துவிட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து விழாவை படக்குழுவினர் ரத்து செய்துவிட்டனர். ஜூனியர் என்டிஆர் வராததால் ரசிகர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸார் தடியடி நடத்தியதில் ரசிகர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அங்கிருந்த ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். ரசிகர்களின் இந்தச் செயலால் ஓட்டல் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு பொருட்களை ரசிகர்கள் சேதப்படுத்தி விட்டதாக ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து படக்குழு வெளியிட்ட அறிக்கையில், ‘6 ஆண்டுகளுக்கு பிறகு ஜூனியர் என்டிஆரின் படம் சோலோ ரிலீசாக வருவதால் வெளிநாடுகளில் இருந்தும் ரசிகர்கள் வந்துவிட்டனர். ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு வருந்துகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.

The post ஓட்டலுக்குள் அத்துமீறி நுழைந்த 2,000 பேர்: ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Junior NTR ,Hyderabad ,Janhvi Kapoor ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க...