×

புஷ்பா 2 ரிலீஸ் மீண்டும் மாற்றமா?

ஐதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிக்கும் பான் இந்தியா படம், ‘புஷ்பா 2’. இது, வரும் டிசம்பர் 6ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அன்றைய தினம் சில தெலுங்கு படங்களும், இந்தியில் உருவான பான் இந்தியா படமான ‘சாவா’ என்ற படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, அன்றைய தினம் ‘புஷ்பா 2’ படம் திரைக்கு வராது, மீண்டும் ரிலீஸ் தேதி மாற வாய்ப்பிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பட விழா ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜூன் ஆகியோரிடம் சிலர் கேட்டனர். இதற்கு பதிலளித்த சுகுமார், ‘ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் மிகச்சிறந்த ஒரு அனுபவத்தை வழங்க, படக்குழுவினர் இடைவிடாமல் உழைத்து வருகிறோம். ஏற்கனவே நாங்கள் திட்டமிட்ட சில காட்சிகளைப் படமாக்க அதிக நேரம் ஆகிறது. படப்பிடிப்பில் எந்தவொரு விஷயத்திலும் நாங்கள் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை.

நினைத்ததை விட மிகப் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கி வருகிறோம். அதனால்தான் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. அல்லு அர்ஜூனின் நடிப்பும், படமும் மிகச்சிறப்பாக இருக்கும்’ என்றார். மேலும், ‘புஷ்பா 2’ படம் திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 6ம் தேதி திரைக்கு வருவது உறுதி என்றும், சோஷியல் மீடியாவில் வெளியாகும் வதந்திகள யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

The post புஷ்பா 2 ரிலீஸ் மீண்டும் மாற்றமா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hyderabad ,Allu Arjun ,Rashmika Mandhana ,Bahad Basil ,Pan ,India ,Sukumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இறந்தவர் குடும்பத்தாருக்கு...