×

அதிமுக பொதுக்குழுவிற்கு செல்வதற்கு முன்பாக ஈபிஎஸ் வீட்டில் சிறப்பு யாகம்… ஓபிஎஸ் வீட்டிற்குள் மாடு கொண்டு வரப்பட்டு கோ பூஜை!!

சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு செல்வதற்கு முன்பாக இன்று அதிகாலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடக்கிறது.ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களைத் தவிர, ஒற்றைத் தலைமை தொடர்பான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற ஐகோர்ட் தடை விதித்தது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு முன்பாக ஓபிஎஸ், இபிஎஸ் வீட்டில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. எடப்பாடி வீட்டில் இன்று அதிகாலை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. 30 நிமிடம் விடாமல் ஒரே இடத்தில அமர்ந்து.. நீண்ட நேரம் பூஜையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இன்னொரு பக்கம் ஓபிஎஸ் வீட்டில் கோ பூஜை நடத்தப்பட்டது.வீட்டிற்குள் மாடு கொண்டு வரப்பட்டு சிறப்பு கோ பூஜை நடத்தப்பட்டது. சென்னை இல்லத்தில் நடந்த கோமாதா பூஜையில் மஞ்சள் வேட்டி, வெள்ளை சட்டையில் ஓபிஎஸ் பங்கேற்றார்.பூஜைக்கு பின்பாக அதிமுக பொதுக்குழுவை நோக்கி இன்று எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டு சென்றார். எடப்பாடி பழனிசாமி காரில் ஏறும் முன் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் சார்பாக பூர்வ கும்ப மரியாதை கொடுத்தனர்.பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவை நோக்கி சென்றபோது வாகனங்களை மறித்து ‘ஓபிஎஸ் வாழ்க’ என தொண்டர்கள் முழக்கமிட்டனர். மறுபுறம், அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக பிரசார வாகனத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வானகரம் சென்றார். …

The post அதிமுக பொதுக்குழுவிற்கு செல்வதற்கு முன்பாக ஈபிஎஸ் வீட்டில் சிறப்பு யாகம்… ஓபிஎஸ் வீட்டிற்குள் மாடு கொண்டு வரப்பட்டு கோ பூஜை!! appeared first on Dinakaran.

Tags : EPS ,UPS House ,Cow ,OPS ,Chennai ,Edapadi Palanisamy ,O Panneerselvam ,OPS House ,
× RELATED நாகை எம்.பி. செல்வராஜ்...