×

2ம் நூற்றாண்டின் கதை கண்ணப்பா: விஷ்ணு மன்ச்சு நெகிழ்ச்சி

ஐதராபாத்: விஷ்ணு மன்ச்சுவின் கனவுப் படமான ‘கண்ணப்பா’ படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான மோகன் பாபு தயாரிக்க, முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகனான விஷ்ணு மன்ச்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன் லால், பிரபாஸ், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விஷ்ணு மன்ச்சு பேசுகையில், ‘2015-ல் நான் கண்ணப்பாவை தொடங்கும் போது, ​​என் கடவுள், என் அப்பா மோகன்பாபு, வின்னி, அண்ணன் வினய் ஆகியோர் கொடுத்த ஊக்கத்தால் தான் என்னை முழுவதுமாக நம்பி கண்ணப்பாவை திரைக்குக் கொண்டு வர முடிந்தது. 14 ஆம் நூற்றாண்டில் நாயனார்களைப் பற்றி கவிஞர் துர்ஜதி எழுதினார். கண்ணப்பா ஒன்பாதவது நாயனார். இது 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தை பிகானர் பல்கலைக்கழகத்தில் கண்டோம்.

அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, அதை மிகவும் கவனமாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு பயணிக்கிறேன். இந்த படத்தில் இரண்டாம் நூற்றாண்டின் கதையைச் சொல்கிறோம், அந்தக் காலகட்டத்திற்கு ஏற்றவாறு படத்தை நியூசிலாந்தில் படமாக்கினோம். பட்ஜெட் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை, வரலாற்றில் இடம்பிடிக்கும் ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கையுடன் படத்தை தயாரித்து வருகிறோம்’ என்றார்.

The post 2ம் நூற்றாண்டின் கதை கண்ணப்பா: விஷ்ணு மன்ச்சு நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vishnu Manchu Eleschi ,Hyderabad ,Vishnu Manchu ,AVA Entertainments ,24 Frames Factory ,Mohan Babu ,Mukesh Kumar Singh.… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பர்தா அணிந்தபடி நகை கடைக்குள்...