×

ரசிகர்கள் தியேட்டருக்கு வர மறுக்கின்றனர்: வெற்றிமாறன் பேச்சு

சென்னை: லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே.குமார் தயாரிக்க, ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்த ‘கருடன்’ படம் வெற்றிபெற்றுள்ளது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் சூரி, சசிகுமார், ஆர்.வி.உதயகுமார், ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சன் கலந்துகொண்டனர். அப்போது இயக்குனரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறன் பேசியதாவது: இன்றைய சூழ்நிலையில் ரசிகர்கள் தியேட்டருக்கு வர மறுக்கின்றனர். டிஜிட்டல் தளங்களை நம்பி திரைப்பட வணிகம் இருக்கிறது. கடந்த 3 வருடங்களாக இதைத்தான் நாம் மாடலாக வடிவமைத்து வருகிறோம். டிஜிட்டல் தளங்கள், டி.வி உரிமை ஆகியவற்றில் இருந்து படத்துக்கான முதலீடு கிடைக்கும். திரையரங்க வெளியீடு என்பது கூடுதல் போனஸ். இதை இந்த வருடம் மாற்றிய சில படங்களில் ‘கருடன்’ படமும் ஒன்று.

திரைப்படத்தில் முதலீடு செய்த பணத்தை திரையரங்கில் இருந்தும், திரையரங்கின் வசூலில் இருந்தும் மீட்க முடியும் என்பதை நிரூபித்த படம் ‘கருடன்’. டிஜிட்டல் தளம் மற்றும் டி.வி உரிமை விற்பனையை போனசாக வைத்துக்கொள்ளலாம் என்று உறுதிப்படுத்திய படம், ‘கருடன்’. இந்த வகையிலான வணிகம்தான் ஜனநாயகம் மிக்கது என்று உணர்கிறேன். சசிகுமார் தனித்துவமான நடிப்பை வழங்கி இருக்கிறார். சூரியின் உழைப்பு அசாதாரணமானது. அவர் இன்னும் சிறப்பான நடிகராக கூடுதல் உயரத்துக்கு செல்வார்.‌

The post ரசிகர்கள் தியேட்டருக்கு வர மறுக்கின்றனர்: வெற்றிமாறன் பேச்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vetimaaran ,Chennai ,K.Kumar ,Lark Studios ,RS Durai Senthilkumar ,Suri ,Sasikumar ,RV Udayakumar ,Arthur A. Wilson ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு...