×

நண்பன் ஒருவன் வந்த பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் அனுமதியுடன் முஸ்தபா… முஸ்தபா

சென்னை: ‘மீசையை முறுக்கு’ படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் தம்பியாக நடித்திருந்த அனந்த், தற்போது கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள படம், ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. இதை மசாலா பாப்கார்ன், ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் சார்பில் ஐஸ்வர்யா.எம், சுதா.ஆர் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ்ச்செல்வன் ஒளிப்பதிவு செய்ய, ‘காற்றின் மொழி’ ஏ.ஹெச்.காஷிப் இசை அமைத்துள்ளார். அனந்த், ராஜேஷ்.வி திரைக்கதை எழுதியுள்ளனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு வழங்கும் இப்படத்தில் ஆர்ஜே விஜய், பவானிஸ்ரீ, இர்பான், வில்ஸ்பேட், தேவ், மோனிகா சின்னகொட்லா, கேபிஒய் பாலா நடித்துள்ளனர். படம் குறித்து அனந்த் கூறுகையில், ‘எனது நண்பன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி உருவான இப்படத்தின் கதை 1992 முதல் 2024 வரை நடக்கும். இளையராஜா ரசிகராக வெங்கட் பிரபுவும், ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகராக நானும் நடித்துள்ள இப்படத்தின் கதையை கேட்ட வெங்கட் பிரபு, பாராட்டினார்’ என்றார்.

ஏ.ஹெச்.காஷிப் கூறுகையில், ‘தமிழில் ‘காற்றின் மொழி’, மலையாளத்தில் மம்மூட்டி நடித்த ‘பதினெட்டாம் படி’ ஆகிய படங்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளேன். நான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றுவதால், இக்கதையை அவரிடம் சொல்லி, இதில் ‘முஸ்தபா… முஸ்தபா’ என்ற பாடலைப் பயன்படுத்துவதையும், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இப்படம் அமையும் என்றும் சொன்னேன். உடனே அவர் எந்த தடையும் விதிக்காமல் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்’ என்றார்.

The post நண்பன் ஒருவன் வந்த பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் அனுமதியுடன் முஸ்தபா… முஸ்தபா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mustafa ,AR Rahman ,Chennai ,Ananth ,Masala Popcorn ,White Feather Studios ,Aishwarya.M ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் விளம்பர பதாகைகள் அகற்றம்..!!