×

ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்

சென்னை: தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள மம்தா மோகன்தாஸ். கடைசியாக விஷால், ஆர்யா நடித்த ‘எனிமி’ படத்தில் நடித்தார். அதன் பிறகு மலையாள படங்களிலேயே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இப்போது மகாராஜா படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவரது சமீபத்திய பேட்டி ஒன்றில், கூறியிருப்பதாவது: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒருவரை பார்த்தேன். நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம்.

ஆனால், சில காரணங்களால் அது தொடரவில்லை. அதனால் அவரை விட்டு பிரிந்தேன். என்னைப் பொருத்தவரை, ரிலேஷன்ஷிப் என்பது முக்கியமானது. ஆனால், அது கஷ்டம் தராதபடி இருக்க வேண்டும். எனது வாழ்க்கையில் ஏற்கனவே பல ஏற்ற இறக்கங்கள் பார்த்திருக்கிறேன். அதற்கிடையில் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் கூடுதலான அழுத்தத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. காதலில் அதை சார்ந்த உறவில் ஒரு முறை தோற்றால் வாழ்க்கை அவ்வளவுதான் என எடுத்துக்கொள்ளக் கூடாது.

இதுதான் நான் வாழ்க்கை அனுபவத்தால் கற்றது. அதனால் இழந்ததை நினைத்து அழுது கொண்டே இருக்கும் மனநிலையில் நானில்லை. இப்போது நான் ஒருவரை பார்த்திக்கிறேன். இந்த உறவில் நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். கல்யாணம் பற்றி யோசிக்கவில்லை. வாழ்க்கை எங்கு கொண்டு போகிறது என்பதை பார்க்க வேண்டும். காலப்போக்கில் எல்லாமே தெரிந்துவிடும். சினிமாவைத் தவிரவும் எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதற்கு நான் நேரம் ஒதுக்குவதை என் குடும்பத்தார் மதிக்கிறார்கள் என்றார்.

The post ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mamata ,Chennai ,Mamata Mohandas ,Vishal ,Arya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மம்தாவுடன் பாஜ எம்பி சந்திப்பு