×

தமிழ், தெலுங்கில் வெளியாகும் லெவன்

சென்னை: ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து ‘லெவன்’ படத்தை ஏஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர். இயக்குனர் சுந்தர் சியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த படத்தை இயக்குகிறார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ வெப் தொடர், ‘சரபம்’, ‘சிவப்பு’ மற்றும் சசிகுமாரின் ‘பிரம்மன்’ படங்களில் நடித்த இவர், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் நடித்து வருகிறார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அபிராமி, ஆடுகளம் நரேன், திலீபன், ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி. இமான் இசை. கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு. படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் என்.பி. படத்தின் டீசர் விரைவில் வெளியாகிறது. இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் கூறும்போது, ‘ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக ‘லெவன்’ அமையும்’ என்றார்.

The post தமிழ், தெலுங்கில் வெளியாகும் லெவன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Ajmal Khan ,Riya Hari ,AR Entertainment ,Lokesh ,Sundar C ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...