×

சூப்பர் ஸ்டாருக்கு என்ன ஆச்சு? செல்போனை உடைக்க பார்த்த அமிதாப் பச்சன்

மும்பை: தனது செல்போனை உடைக்க முயன்றதாக அமிதாப் பச்சன் கூறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.டிவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கிறார் அமிதாப் பச்சன். தினந்தோறும் இரவு நேரத்தில் இவர் ஏதேனும் விஷயத்தை ரசிகர்களிடம் டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்வார். அதுபோல் டிவிட்டர் பதிவுகளை வெளியிட தனக்கென ஒரு அட்மினை அமிதாப் வைத்துக்கொள்ளவில்லை. தன்னுடைய செல்போன் மூலமே தானே டைப் செய்து பதிவுகளை வெளியிடுவார். பெரும்பாலும் இந்தியில் தனது பதிவுகளை அவர் டைப் செய்வார். சமீபத்தில் அதுபோல் டைப் செய்வதற்காக தனது செல்போனை எடுத்துள்ளார். இந்தியில் டைப் செய்ய முயலும்போது, அது ஆங்கிலத்தில் டைப் ஆகியிருக்கிறது.

சரியென ஆங்கிலத்திலேயே டைப் ெசய்யலாம் என முயன்றபோது அது இந்தியில் டைப் ஆகியுள்ளது. அதுவும் வார்த்தைகள் தவறாக பதிவாகியுள்ளன. இது பற்றி குறிப்பிட்ட அமிதாப், ‘கல்கி படம் குறித்த பதிவை வெளியிட வேண்டியிருந்தது. மிகவும் அவசரத்தில் இருந்தேன். காரணம், படப்பிடிப்புக்கு இடையே இதற்காக நேரம் ஒதுக்கியிருந்தேன். இப்படியொரு சூழலில் நினைத்ததை பதிவிட முடியாத கோபத்தில் எனது செல்போனை பாதியாக உடைத்து, அதை அருகில் இருந்த ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறிய தயாராகிவிட்டேன். அந்த அளவுக்கு நான் எனது நிலையிலிருந்து தடுமாறிப்போனேன். ஒருவித அழுத்தம் எனது மனதை ஆட்படுத்தியிருந்தது. சொல்லப்போனால் இது சிறு விஷயம்தான். ஆனால் வயதாக ஆக எனக்கு எல்லாமே அதிகமாக தோன்றுகிறது’ என்றார். அமிதாபின் இந்த செயல் தங்களுக்கு அதிர்ச்சி தருவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.

The post சூப்பர் ஸ்டாருக்கு என்ன ஆச்சு? செல்போனை உடைக்க பார்த்த அமிதாப் பச்சன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Amitabh Bachchan ,Mumbai ,Twitter ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு