×

பிதா திரைப்பட அறிவிப்பு விழா!!

சென்னை: ஸ்ரீநிக் புரொடக்‌ஷன் சார்பில் தயாரிப்பாளர்கள் டி பால சுப்பிரமணி & சி சதீஷ் குமார்
தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், வி மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் நடிகை லக்‌ஷ்மி  ‌ராமகிருஷ்ணன் பேசியதாவது; மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். சினிமா ஒரு பவர் புல் மீடியா. ஒவ்வொரு வாய்ப்பும் மிக முக்கியமானது. அது முடிந்த பிறகு தான் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் எனத் தோன்றும்.  எனவே கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  இந்தக்குழுவிடம் நிறைய உழைப்பு தெரிகிறது. மதி  நடிகராக அறிமுகமாகும் படம். டிரெய்லர் நன்றாக உள்ளது,  கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது; பிதா அன்மாஸ்கிங் மிக சந்தோசமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இன்னொரு புது ஹீரோ, புது தயாரிப்பாளர் வருவதை நாம் வரவேற்க வேண்டும். இன்றைக்குத் தமிழ் சினிமாவில் ஹீரோ சம்பளம் மிகப்பெரியதாகி விட்டது. படத்தின் பட்ஜெட் எங்கோ போய்விட்ட நிலையில், இந்த மாதிரி புது அறிமுகங்கள் வர வேண்டும். மதியழகன் நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து, நல்ல படங்கள் செய்ய வாழ்த்துக்கள். கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  எல்லோரையும் மகிழ்விக்கும் படமாகப் பிதா வர வாழ்த்துக்கள்.

இயக்குநர் சரவணன் சுப்பையா பேசியதாவது; இப்படத்தின் தயாரிப்பாளர் நிறையப் படம் செய்துள்ளார். பல படங்கள் செய்யும் நிலையில் இந்தப்படத்தைத் தயாரிக்கக் காரணம் இந்தக்கதை தந்த இம்பாக்ட் தான். இந்தக்கதையை உருவாக்கிய கார்த்திக் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் சரண் பேசியதாவது; பிதா அன்மாஸ்கிங். இந்த அன்மாஸ்கிங் என்பது இனிமேல் தமிழ் சினிமாவில் டிரெண்டாக இருக்கும். ஒரு தயாரிப்பாளர் ஹீரோவாக களமிறங்குகிறார். கார்த்திக் குமார் இயக்குகிறார் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவே நான் வந்துள்ளேன். படத்தின் காட்சிகள் பார்த்தேன் வனிதாவையே கடுப்போடுட்டு விட்டார்கள் என்றால் இவர்கள் ரசிகர்களையும் கட்டிப் போட்டு விடுவார்கள். இசை ஒளிப்பதிவு எல்லாம் நன்றாக உள்ளது. பெரிய நம்பிக்கை தருகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர்  மணிகண்டன் பேசியதாவது; பிதா டிரெய்லர் மிரட்டுகிறது. முழுக்க இளைஞர்களாக இருக்கிறார்கள். நன்றாகச் செய்துள்ளார்கள். இந்தப்படத்தின் எதிர்காலம் பத்திரிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது. இன்று பல படங்கள் வெளியிடப்பட முடியாமல் உள்ளது. கஷ்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும். பிதா ஜெயிக்க எனது வாழ்த்துக்கள்.

பாபி மாஸ்டர் பேசியதாவது; மதி சாருக்கும் எனக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் உள்ளது. அவரெடுத்த எல்லாப்படத்திலும் நான் இருப்பேன். அவரது ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் இப்படம் பெரிய வெற்றி பெறும். என்னை எப்போதும் முழுமையாக நம்புபவர் அவர். மதி சாரின் எல்லாப்படங்களிலும் என் பங்கு இருக்கும். ஒரு நல்ல ஹீரோ சினிமாவுக்கு அறிமுகமாகிறார் அவர் பெரிய உயரம் செல்ல வேண்டும். வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் நடிகர் வி மதி பேசியதாவது; இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை , இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன் இப்பொழுது நடிகனாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன்.  உங்கள் முழு ஆதரவினை தர வேண்டுகிறேன், நீங்கள் எப்போதும் எனக்கு நல்ல ஆதரவைத் தந்து வந்திருக்கிறீர்கள் ஆனாலும் கடைசி படம் பெரிய அளவில் செல்லவில்லை, இருந்தும் ராமராஜன் சார் அவர்களை நடிக்க வைத்த பெருமை கிடைத்தது சந்தோஷம். இப்படத்தில் ஈழம், மேதகு பிரபாகரன் போன்ற விஷயங்களைப் பரபரப்புக்காகப் பயன்படுத்தவில்லை அவர்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை மிகவும் உண்மையாக ஒரு படைப்பை உருவாக்கி உள்ளோம். இதுவரை இல்லாத வகையில் மிக வித்தியாசமான படைப்பாக இந்த படம் இருக்கும், உங்கள் அனைவர் ஆதரவையும்  தாருங்கள் நன்றி.

இயக்குநர் கார்த்திக் குமார் பேசியதாவது; எனது தயாரிப்பாளர் பால சுப்ரமணியன் அவர்களுக்கும், சதீஷ் அவர்களுக்கும் முதல் நன்றி சாமானியன் திரைக்கதையை அவர்களிடம் சொன்னபோது, கேட்டவுடனே அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, உடனே அதைத் தயாரித்தார்கள். அதேபோல் இந்தக் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து, தயாரித்து இருக்கிறார்கள் மிக்க நன்றி. அவர்கள் தந்த வாய்ப்புதான் இந்த மேடையில்  நான் நிற்கக் காரணம், நடிகராக இந்த படத்தில் மதியழகன் சார் அறிமுகமாகிறார். அவர் மனதளவில் மிக அழகானவர், அவர் எங்கேயும் பேச மாட்டார் இந்த மேடையில் தான் முதல் முறையாகப் பேசியுள்ளார்.

மிக அமைதியானவர் ஒரு சிறு தொழிலைப் பார்த்தாலே பலர் வேறு துறைக்குச் சென்று விடுவார்கள் ஆனால் மதியழகன் சார் பத்து பன்னிரண்டு படங்களைத் தாண்டி திரைத்துறை தான் வேண்டும் என்று நிமிர்ந்து நிற்கிறார் தொடர்ந்து படங்கள் செய்கிறார் இப்படத்தில் முழு நடிகராக வருகிறார். அவரிடம் பயங்கரமான திறமை இருக்கிறது, அது இந்த திரைப்படத்தில் முழுமையாக வெளிப்படும், இந்தப் படத்திற்காக மதி சார் ரொம்பவும் மெனக்கெட்டுள்ளார். இதுவரை சொல்லாத புதிய விஷயத்தைச் சொல்ல முயற்சித்துள்ளோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நாஞ்சில் சம்பத் பேசியதாவது; நண்பர் தம்பி கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். நான் வாழ்ந்த ஊரைச் சார்ந்தவன் தம்பி கார்த்திக். ஒரு அதிர்வை உண்டாக்கும் படைப்பைத் தம்பி செய்கிறான் என்பது மகிழ்ச்சி. இன்றைய காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பல படங்கள் திரைக்கு வரவில்லை. பல படங்கள் சென்சார் பிரச்சனைகளில் சிக்கி முடங்கிக் கிடக்கிறது.  நான் நடித்த ஒரு படத்தின் பெயர் சேகுவாரா. அதில் என் பெயர் அண்ணாதுரை அந்தப்பெயர் வரக்கூடாதென்கிறார்கள். சினிமா என்பது சதுப்புநிலம். அதை அணுகுவது கடினம்.

நான் சினிமாக்காரன் இல்லை நான் இருக்கும் இடத்தில் இருக்கும் அரசியலை விட இங்கு அதிக அரசியல் இருக்கிறது. அந்த களத்தில் தம்பி கார்த்திக் ஒரு நல்ல படைப்பைத் தர முயற்சிக்கிறார். அவர் முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும். ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படைப்பாளியாக கார்த்திக் குமார் வருவார். 11 படங்களைத் தயாரித்த மதியழகன் இப்படத்தில் நடிகராக மாறியுள்ளார். இந்தக்கூட்டணி வெல்வதற்கு என் வாழ்த்துக்கள் நன்றி. இறுதியாக படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியீட்டுடன் விழா நிறைவுற்றது.

The post பிதா திரைப்பட அறிவிப்பு விழா!! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Pita Movie Announcement Ceremony ,CHENNAI ,D Bala Subramani ,C Satish Kumar ,Srinik Productions ,Karthik Kumar ,V Mathi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...