×

கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை: பாலிவுட் இசையமைப்பாளர் அதிரடி அறிவிப்பு

மும்பை: சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனாவை அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு வேலை தருவதாக பாலிவுட் இசையமைப்பாளர் விஷால் தத்லானி தெரிவித்துள்ளார். சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜ எம்.பி.யுமான கங்கனா ரனவத்தை சிஐஎஸ்எஃப் பெண் காவலரான குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசை எதிர்த்து விவசாயிகள் பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும் 100 ரூபாய் வாங்கிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் இழிவுபடுத்தி விமர்சனம் செய்தார் கங்கனா ரனவத்.

இதற்காகவே அவரை அறைந்ததாக குல்விந்தர் கவுர் தெரிவித்தார். மேலும் அந்த போராட்டத்தில் தனது தாயும் கலந்துகொண்டிருந்ததாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் குல்விந்தர் கவுரின் செயலுக்கு நெட்டிசன்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில், கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு இசையமைப்பாளரும் பாடகருமான விஷால் தத்லானி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரி பகுதியில், “நான் வன்முறையை ஆதரிப்பது இல்லை. ஆனால் நிச்சயமாக அந்த காவலரின் தனிப்பட்ட கோபத்தின் தேவையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

அவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவருக்காக வேலை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் உறுதியளிக்கிறேன்.ஜெய்ஹிந்த். ஜெய்ஜவான். ஜெய் கிசான்” என்று விஷால் தத்லானி தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை: பாலிவுட் இசையமைப்பாளர் அதிரடி அறிவிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mumbai ,Vishal Dadlani ,CISF ,Kangana ,Chandigarh airport ,BJP ,Kangana Ranaut ,Kulwinder Kaur ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு