×

நிச்சயதார்த்தம் நடந்தது நிஜம்தான்

சென்னை: தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான் என நடிகை சுனேனா கூறியுள்ளார். நகுலுக்கு ஜோடியாக காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமானவர் சுனேனா. தொடர்ந்து மாசிலாமணி, பரத்துக்கு ஜோடியாக திருத்தணி, அருள்நிதிக்கு ஜோடியாக வம்சம், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நீர்ப்பறவை, விஜய் நடித்த தெறி உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார்.  இந்நிலையில் ஆண் ஒருவரின் கையை பிடித்தபடி சுனேனா அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

இதையடுத்து சுனேனாவுக்கு திருமணம் என்ற தகவல் பரவியது. புகைப்படம் வெளியிட்டு 2 நாட்கள் அமைதியாக இருந்த சுனேனா, இது பற்றி இப்போது இன்ஸ்டாகிராமிலே பதில் சொல்லியிருக்கிறார். ‘நான் போட்ட பதிவால் பல்வேறு ஊகங்கள் கிளப்பப்படுகின்றன. அதற்காக நானாகவே நடந்ததை சொல்லிவிடுகிறேன். எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது’ என்றார். அவரது வருங்கால கணவர் யார் என்பதை சுனேனா சொல்லவில்லை.

The post நிச்சயதார்த்தம் நடந்தது நிஜம்தான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Sunena ,Nakul ,Masilamani ,Tiruthani ,Bharat ,Vamsam ,Arulnidhi ,Neerparavai ,Vishnu Vishal ,Vijay ,Kollywood Images ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...