×

அப்பா இறந்து ஒரு வாரத்துக்கு பிறகு தகவல் அறிந்த ஷெரின்: இன்ஸ்டாவில் உருக்கம்

சென்னை: கர்நாடகாவை சேர்ந்தவர் ஷெரின். இவர் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். செல்வராகவன் இயக்கிய இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷெரின். அப்படம் ஹிட்டானதை தொடர்ந்து ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஷெரின் நடித்த ‘விசில்’ படம் 2003ல் வெளியாகி வெற்றி பெற்றது. அப்படத்தில் இடம்பெற்ற ‘அழகிய அசுரா’ பாடலில் ஷெரினின் நடனம் பிரபலம்.

பின்னர் தமிழில் பெரியளவில் ஹிட் கொடுக்காததால் ஷெரினுக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தமிழில் அவர் கைவசம் ‘ரஜினி’ என்ற படம் மட்டும் உள்ளது. இந்த நிலையில், நடிகை ஷெரின் நேற்று தன் தந்தையின் மறைவு குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில், ‘நான் உன்னை (தந்தையை) மிகவும் நேசித்தேன், என் வாழ்நாள் முழுவதும் உனது அன்பிற்காக ஏங்கினேன். ஒரு வாரத்திற்கு முன்பே நீங்கள் இறந்துவிட்டீர்கள், ஆனால் இன்றுதான் எனக்கு தகவல் கிடைத்தது, அதைக்கேட்டு நான் மனமுடைந்து போனேன். உங்களது இந்தப் படம் தான் என்னிடம் உள்ளது, இது என்னிடம் எப்போதும் இருக்கும். மிஸ் யூ’ என பதிவிட்டுள்ளார். தந்தை பிரிந்து சென்றதால் ஷெரின் தன் தாயுடன் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

The post அப்பா இறந்து ஒரு வாரத்துக்கு பிறகு தகவல் அறிந்த ஷெரின்: இன்ஸ்டாவில் உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sherin ,Chennai ,Karnataka ,Dhanush ,Selvaraghavan ,JD Jerry ,Instagram ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED யூடியூபர் VJ சித்துக்கு எதிராக போலீசில் புகார்!