×

காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி

சென்னை: பொது நிகழ்ச்சிகளில் காலணி அணியாமல் பங்கேற்பது குறித்து விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார். பொது நிகழ்ச்சிகளில் காலில் காலணி அணியாமல் தான் விஜய் ஆண்டனி பங்கேற்று வருகின்றார். படப்பிடிப்புக்கு மட்டும்தான் காட்சிக்காக காலணி அணிகிறார். மற்றபடி எங்கு சென்றாலும் காலில் செருப்போ, ஷூவோ அவர் அணிவதில்லை. இது குறித்து விஜய் ஆண்டனியிடம் கேட்டபோது, ‘நான் எப்போது கால்களில் செருப்பு இல்லாமல் பயணிக்க ஆரம்பித்தேனோ அன்று முதல் எனக்கு எந்த விதமான நெருக்கடியான சூழலும் இதுவரை ஏற்படவில்லை.

என் வாழ்நாள் முழுவதும் இப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் அதனால் தான் நான் காலணிகளை போடுவதில்லை. அதுமட்டுமல்லாமல் இது எனக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்தோஷத்தை தருகிறது’ என்று அவர் கூறியிருக்கிறார். ‘விஜய் ஆண்டனியின் மகள் இறந்த பிறகுதான் அவர் இப்படி மாறியிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அது உண்மை கிடையாது. அதற்கு முன்பிலிருந்தே அவர் காலணிகள் அணிவதில்லை’ என விஜய் ஆண்டனிக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

The post காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Antony ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch