×

தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்

சென்னை: வாரிசு நடிகைகளுக்கு மட்டுமல்ல, பின்புலம் இல்லாத நடிகைகளுக்கும் மக்கள் ஆதரவை தருகிறார்கள் என்றார் வாணி போஜன். தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளுக்கு பின்புலம் இல்லாத நடிகர், நடிகைகளை விட வரவேற்பு இருக்கிறதா என்பது குறித்து வாணி போஜன் கூறியது: நிச்சயமாக அவங்களுடைய அறிமுகம் பெரியதாக இருக்கும். ஆதரவளிக்க ஒரு நான்கு பெரிய நடிகர்கள் வருவார்கள். அடுத்தடுத்த படங்கள் குவிகிறது. அது எல்லாம் தவிர்க்க முடியாதவை.

இங்கு என்றில்லை உலகில் எந்த சினிமா துறையிலும் அப்படித்தான் நடக்கும். சொல்லப்போனால் சினிமா அல்லாத துறைகளிலும் அதுபோல் நடக்கும். இதைப் பொறாமையில் சொல்லவில்லை. யதார்த்தத்தில் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் என்னை மாதிரி நிறையப் பெண்களைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும். நல்ல நடிகைகளைப் பார்க்கும்போது, இந்த நடிகைக்கு எப்போது அந்தப் பெரிய அறிமுகம் கிடைக்கும் என்று தோன்றும்.

ஆனால் மக்கள் உண்மையாக இருக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. குறிப்பிட்ட நடிகை, யாராக இருந்தாலும் திறமை இருந்தால் அவர்களை வரவேற்பார்கள். இல்லாவிட்டால் நிராகரிப்பார்கள். பிரபலங்களின் குடும்பத்திலிருந்து வந்ததால், அவர்களுக்கு அதிக வரவேற்பையும் அறிமுக நடிகைகளுக்கு குறைவான வரவேற்பையும் கொடுப்பதில்லை. அதனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு வாணி போஜன் கூறினார்.

The post தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vani Bhojan ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வெளிநாட்டு பயணத்தில் இருந்து...