×

இந்தியாவை தமிழன் ஆளும் நாள் ஏன் வரக்கூடாது?; கமல்ஹாசன் ஆவேசம்

சென்னை: ‘இந்தியன்’ வெளியாகி 28 வருடங் களுக்குப் பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’. சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித் துள்ளன. காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம் மானந்தம், சமுத்திரக்கனி, விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, மாரிமுத்து நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜூலை 12ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:
ஒருமுறை இதுபோன்ற கதை கொண்ட ஒரு படத்தை எனது இயக்கத்தில் சிவாஜி சாரை நடிக்க வைத்து இயக்க நினைத்திருந்தேன். உடனே அவர், ‘நானும், நீயும் அப்பா, மகனாக நடித்துவிட்டோம். ‘இந்தியன்’ படத்தில் நீயே அப்பா, மகன் வேடங்களில் நடிப்பதால், அந்தப் படத்தை தவிர்க்க வேண்டாம்’ என்று சொன்னார். இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு ஆன செலவு, நான் நடித்திருந்த பல படங்களின் பட்ஜெட்டை விட அதிகம். கே.பாலசந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர் கதை’ படத்தில் நடித்திருந்த எனக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பளம். 7 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இன்று நான் அதிக சம்பளம் வாங்குவதற்கு காரணம் இயக்குனர்கள்தான். ‘இந்தியன் 2’ படம் சிக்கலில் மாட்டி தவித்தபோது, உதயநிதியின் உதவியால் அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்து சென்றது.

எங்களுக்கு உறுதுணையாக இருந்த உதயநிதிக்கு மக்கள் வேறொரு பொறுப்பு கொடுத்துள்ளனர். அதிலும் அவர் வெற்றிபெற வேண்டும். நான் ஒரு தமிழன், நான் ஒரு இந்தியன் என்பதே என் அடையாளம். இந்தியாவை தமிழன் ஆளும் நாள் ஏன் வரக்கூடாது? இதையும் நாம் செய்து காட்டுவோம். இங்கே பிரித்து விளையாடலாம் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது. யாதும் ஊரே யாவரும் கேளீர். நாம் எப்போதும் வந்தாரை வாழ வைப்போம். தமிழனுக்கு எப்போது அமைதி காக்க வேண்டும் என்று தெரியும், எங்கே இருக்க வேண்டும் என்று தெரியும். எங்களை யாராவது பிரிக்க நினைத்தால், அவர்களது எண்ணம் நிறைவேறாது. என்னைப் போன்ற பகுத்தறிவுவாதிகளுக்கு கடவுள் இல்லா மல் கூட இருக்கலாம். ஆனால், மனிதர்கள் இல்லாமல் இருக்க முடியாது. இந்த உலகில் அன்புதான் உயர்ந்தது.

தற்பெருமையும் பிடிக்காது, தற்படம் (செல்ஃபி) எடுத்துக்கொள் வதும் எனக்குப் பிடிக்காது. ஒருமுறை நான், ‘இனிமேல் நான் சினிமாவில் நடிக்க மாட்டேன்’ என்று அறிவித்தபோது, டி.ராஜேந்தர் என் ரூமுக்கு வந்து என்னைக் கட்டிப்
பிடித்து, ‘இனிமேல் நடிக்க மாட்டேன் என்று சொல்லக் கூடாது’ என்று கதறியழுது, என்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு சென்றார். இன்று அவரது மகன் சிம்பு என்னுடன் இணைந்து ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்கிறார்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். ஷங்கர், சிம்பு, நாசர், லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, தம்பி ராமய்யா, பிரம்மானந்தம், கபிலன் வைரமுத்து, சுபாஷ்கரன், செண்பகமூர்த்தி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அனிருத், ஸ்ருதிஹாசன், அதிதி சங்கர் பாடி ஆடினர். மவுனிராய், ஊர்வசி ரவுடேலா தங்களது குழுவினருடன் இணைந்து நடனமாடினர்.

The post இந்தியாவை தமிழன் ஆளும் நாள் ஏன் வரக்கூடாது?; கமல்ஹாசன் ஆவேசம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : India ,Kamal Haasan ,Chennai ,Shankar ,Subhashkaran ,Laika Productions ,Red Giant Movies ,Kajal Aggarwal ,Siddharth ,Rahul ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு...