×

இசையமைப்பில் மீண்டும் பிஸியான ஷ்ருதி ஹாசன்.!

2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “ஏழாம் அறிவு” என்கிற திரைப்படத்தின் மூலம் நாயகியாக தனது பயணத்தை தொடங்கினார் நடிகையும் இசையமைப்பாளரும் மற்றும் உலகநாயகனின் மகளுமான ஷ்ருதி ஹாசன். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல படங்களில் தொடர்ச்சியாக அவர் நடித்து வருகிறார். இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான சலார் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகின்றார். அண்மையில் அவர் இசையமைத்து பாடிய “இனிமேல்” என்கின்ற இசை ஆல்பத்தை வெளியிட்டிருந்தார். இந்த ஆல்பத்தை உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து வழங்கினார்.

மேலும் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதில் ஷ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆல்பம் மிகப்பெரிய அளவில் வைரலானது. நடிப்பிற்கு இடையில் இசையிலும் ஆர்வம் காட்டத் துவங்கியிருக்கும் ஸ்ருதிஹாசன் தொடர்ந்து தனது அடுத்த இசையமைப்பையும் ஆரம்பித்துள்ளதாக சமீபத்திய சமூக வலைத்தள பதிவுகள் மூலம் உறுதி செய்திருக்கிறார். ஸ்ருதி ரிகர்சல் , மை இசை குழு ஜாமிங் ஏன்னா அவரின் அடுத்தடுத்த சமூக வலைத்தள பதிவுகள் அவர் மீண்டும் புது பாடல் உருவாக்கத்தில் இருப்பதையும் , பாடல்களை எழுத துவங்கியுள்ளதையும் காட்டுகிறது.

இசையில் ஒரு பக்கம் முமரமாக இருப்பினும் இன்னொரு பக்கம் , டகாய்ட் : ஏ லவ் ஸ்டோரி, த ஐ உள்ளிட்ட படங்களிலும் பிஸியாக இருக்கிறார். மேலும் சலார் 2 படத்தில் வேலைகளும் கூடிய விரைவில் துவங்கப்படலாம் என தெரிகிறது. இதற்கு முன் தனிப்பாடல்களான ‘மான்ஸ்டர் மெஷின்’, ‘ஷி இஸ் ஏ ஹீரோ’ மற்றும் ‘எட்ஜ்’ அனைத்தும் நல்ல விமர்சனங்களை பெற்று பிரபலமாகின. இந்நிலையில் நடிப்பிற்கிடையில் இசையிலும் தொடர்ந்து தனது நேரத்தை ஒதுக்கி தனி இசை பாடல்களுக்கும் தனித்துவம் சேர்ப்பார் என தெரிகிறது.

The post இசையமைப்பில் மீண்டும் பிஸியான ஷ்ருதி ஹாசன்.! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shruti Hassan ,Shruti Hasan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சூப்பர் ஸ்டாருக்கு என்ன ஆச்சு? செல்போனை உடைக்க பார்த்த அமிதாப் பச்சன்