×

பிரேம்ஜிக்கு ஜூன் 9ல் திருமணம்

சென்னை: காமெடி நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜிக்கு 45 வயதாகிறது. இந்நிலையில் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பெண் பார்த்து வருவதாக கூறப்பட்டது. தற்போது அவருக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சேலத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது திருமண பத்திரிகை குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரேம்ஜிக்கு மனைவியாக வரப்போகிறவர் பெயர் இந்து என்றும் அவர் சேலத்தை சேர்ந்தவர் என்றும் திருமண பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரேம்ஜி – இந்து திருமணம் ஜூன் 9ம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த திருமணம் குறித்து கங்கை அமரன் குடும்பத்தார் தரப்பிலிருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

 

The post பிரேம்ஜிக்கு ஜூன் 9ல் திருமணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Premji ,Chennai ,Salem ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி