×

நான் வயலன்ஸ் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

சென்னை: ஏகே பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லேகா தயாரிப்பில், மெட்ரோ படப்புகழ் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘நான் வயலன்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. 90களின் மதுரை மாநகரைச் சுற்றி, இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதிதி பாலன், கருட ராம், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இப்போது பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

The post நான் வயலன்ஸ் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Lekha ,AK Pictures ,Metro Films ,Ananda Krishnan ,Metro ,Shirish ,Bobby Simha ,Yogi Babu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...