×

இசை அமைக்க சம்பளம் வாங்க மறுத்த கார்த்திக்ராஜா: புஜ்ஜி இயக்குனர் நெகிழ்ச்சி

சென்னை: புஜ்ஜி என்ற ஆட்டுக்குட்டிக்கும், ஒரு சிறுமிக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையப்படுத்தி, முழுநீள குழந்தைகளுக்கான படமாக உருவாகியுள்ளது, ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’. வரும் 31ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி இயக்கி, கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். கமல் குமார், வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், பிரணிதி சிவசங்கரன், லாவண்யா கண்மணி, ராம்குமார், மீனா, வரதராஜன் நடித்துள்ளனர். அருண்மொழிச்சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை 9வி ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது. படம் குறித்து ராம் கந்தசாமி நெகிழ்ச்சியுடன் கூறியதாவது: என் மனைவி சொன்ன ஒரு விஷயத்தை வைத்து கதையை உருவாக்கினேன்.

குழந்தைகளின் கண்ணோட்டத்தில் காட்சிகள் நகரும். சிறுமி பிரணிதி சிவசங்கரன் சிறப்பாக நடித்துள்ளார். நண்பர் வேல் மாணிக்கம் மூலமாக இசை அமைப்பாளர் கார்த்திக்ராஜாவின் அறிமுகம் கிடைத்தது. நாங்கள் படமாக்கிய காட்சிகளை அவருக்கு திரையிட்ட பிறகும் கூட அமைதியாக இருந்தார். நாங்கள் கேட்டபோது, ‘கிளைமாக்சில் ஆடு கிடைத்ததா, இல்லையா?’ என்று கேட்டார். சொன்னோம். உடனே இசை அமைக்க சம்மதித்தார். சம்பளம் எவ்வளவு கேட்பாரோ என்று நாங்கள் பயந்தபோது, எதுவும் தேவையில்லை என்று சொன்னார். எங்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது. முழு ஈடுபாட்டுடன் இசை அமைத்து, எங்கள் படத்தை அதிக உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளார். திரைப்பட விழாக்களில் இப்படத்துக்கு நிறைய விருதுகள் கிடைத்துள்ளது.

 

The post இசை அமைக்க சம்பளம் வாங்க மறுத்த கார்த்திக்ராஜா: புஜ்ஜி இயக்குனர் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Karthikraja ,Leschi ,CHENNAI ,Pujji ,Ram Kandasamy ,Kalalaya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மகனை அடித்துவிட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறேன்: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி