×

ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை படப்பிடிப்பு நிறைவு

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “காதலிக்க நேரமில்லை” ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு M.செண்பகமூர்த்தி, R.அர்ஜுன் துரை. ‘காதலிக்க நேரமில்லை’ முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

The post ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை படப்பிடிப்பு நிறைவு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jayam Ravi ,Kirithika Udayanidhi ,Red Giant Movies ,A. R. In Rahman ,Nitya Menon ,Yogi Babu ,Lal ,Jayam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியாவை தமிழன் ஆளும் நாள் ஏன் வரக்கூடாது?; கமல்ஹாசன் ஆவேசம்