×

ஹாலிவுட் நடிகர் ஜானி வெக்டர் சுட்டுக் கொலை

லாஸ்ஏஞ்சல்ஸ்: 37 வயதான ஜானி வெக்டர் 2007ம் ஆண்டு ‘ஆர்மி வைவ்ஸ்’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். ‘சைபெரியா’, ‘ஏஜென்ட் எக்ஸ்’, ‘ஸ்டேஷன் 19’ போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். தொடர்ந்து ஹாலிவுட்டில் ‘சூப்பர் செல்’, ‘கோல்ட் சோல்ஜர்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்பொழுது நடித்து வரும் பிரபல தொலைக்காட்சி தொடரான ‘ஜெனரல் ஹாஸ்பிட்டல்’ இவருக்கு பெரும் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அவரது காரில் திருடர்கள் திருட முயன்றனர். அப்போது அங்கு வந்த ஜானி இதை தடுக்க முயன்றார். உடனே திருடர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஜானி படுகாயம் அடைந்ததும் திருடர்கள் ஓடிவிட்டனர். இச்சம்பவம் நடந்த உடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஹாலிவுட் நடிகர் ஜானி வெக்டர் சுட்டுக் கொலை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hollywood ,Johnny Vector ,Los Angeles ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED லாஸ் ஏஞ்சல்சில் பயங்கர காட்டுத்தீ: 1,200 பேர் வௌியேற்றம்