×

வாம்மா மின்னலு… என்ற பிரபலமான காமெடியை எழுதிய இயக்குனர் சூர்யபிரகாஷ் மாரடைப்பால் மரணம்

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களை இயக்கியுள்ள சூர்யபிரகாஷ் (57), நேற்று காலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். கடந்த 1996ல் ராஜ்கிரண், வனிதா விஜயகுமார் நடிப்பில் வெளியான ‘மாணிக்கம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், கே.வி.பாண்டியன். பிறகு சரத்குமார் நடித்த ‘மாயி’, ‘திவான்’, ஜீவன் நடித்த ‘அதிபர்’, புதுமுகங்கள் நடித்த ‘வருசநாடு’ ஆகிய படங்களையும், தெலுங்கில் டாக்டர் ராஜசேகர், மீனா நடித்த ‘பரத்சிம்ஹா ரெட்டி’ என்ற படத்தையும் சூர்யபிரகாஷ் என்ற பெயரில் எழுதி இயக்கினார்.

இந்நிலையில், நேற்று காலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சூர்யபிரகாஷ் மரணம் அடைந்தார். ‘மாயி’ படத்தில் வடிவேலு, சூப்பர் குட் லட்சுமணன் நடிப்பில் இடம்பெற்ற ‘வாம்மா மின்னலு…’ என்ற பிரபலமான காமெடி, ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. சூர்யபிரகாஷின் திடீர் மரணம் தமிழ்ப் படவுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சரத்குமார் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘எனது நடிப்பில் வெளியான ‘மாயி’, ‘திவான்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய நண்பர் சூர்யபிரகாஷ், நேற்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. நேற்று முன்தினம் கூட அவருடன் நான் பேசிக்கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது’ என்றார்.

The post வாம்மா மின்னலு… என்ற பிரபலமான காமெடியை எழுதிய இயக்குனர் சூர்யபிரகாஷ் மாரடைப்பால் மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Suryaprakash ,CHENNAI ,Surya Prakash ,KV Pandian ,Rajkiran ,Vanitha Vijayakumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...