×

22 வருடத்தில் 7 படம் மட்டும் இயக்கியது ஏன்? வசந்த பாலன் பதில்

சென்னை: ‘அங்காடித் தெரு’ படத்தின் இயக்குனர் வசந்த பாலன், சமீபத்தில் ‘தலைமைச் செயலகம்’ என்ற வெப்சீரிஸை இயக்கினார். அவர் கூறியதாவது: 22 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். ஆனால் இப்போதும் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். எனது இரண்டு பிள்ளைகளுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும். கமர்ஷியல் சினிமா பக்கம் திரும்பும்படி நான் குடும்பத்தாரால் வற்புறுத்தலுக்கும் ஆளாகிறேன். ஆனாலும் எனது பாணி சினிமாவை நான் விட்டுவிடவில்லை என்றார்.

22 வருடங்களில் வெறும் 7 படங்கள் மட்டுமே இயக்கியதன் பின்னணியில் உங்களது பிடிவாதம் ஒரு காரணமாக இருக்கிறது என சொல்லப்படுகிறது. இது உண்மையா என வசந்த பாலனிடம் கேட்டால், ‘அப்படி இல்லை. எனக்கு இவ்வளவு தான் வரும். இதை செய்வதுதான் பிடித்திருக்கிறது. அதை நோக்கி நான் பயணிக்கிறேன். ஆனால் சூழ்நிலை எல்லாம் கமர்ஷியல் படத்தை நோக்கி என்னை தள்ளுகிறது’ என்று பதிலளித்தார்.

The post 22 வருடத்தில் 7 படம் மட்டும் இயக்கியது ஏன்? வசந்த பாலன் பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vasantha Balan ,CHENNAI ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வெளிநாட்டு பயணத்தில் இருந்து...