×

கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம், ‘வா வாத்தியார்’. முக்கிய வேடங்களில் சத்யராஜ், ராஜ்கிரண், கிரித்தி ஷெட்டி, ஜி.எம்.குமார் நடிக்கின்றனர். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.‌ நடிகர் டி.ஆர்.கே.கிரண் அரங்குகள் அமைக்க, வெற்றி எடிட்டிங் செய்கிறார். அனல் அரசு சண்டைப் பயிற்சி அளிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்தியின் தோற்றம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. குறிப்பாக, கார்த்தி காக்கி உடையுடன், சிவப்பு நிற கண்ணாடி அணிந்திருப்பதும், அவரது பின்னணியில் எம்.ஜி.ஆர் வேடத்தில் சிலர் நிற்பதும் கதையைப் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களாக ராஜ்கிரண், கார்த்தி நடித்து வருகின்றனர்.

 

The post கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் பர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Karthi ,Chennai ,Nalan Kumaraswamy ,Sathyaraj ,Rajkiran ,Kriti Shetty ,GM ,Kumar ,Santhosh Narayanan ,George C.Williams ,DRK Kiran ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சிவகங்கையில் காங்கிரஸ் வெற்றி காமராஜர் சிலைக்கு மரியாதை