×

அழகர் கோயிலில் தைலக்காப்பு திருவிழா : நூபுரகங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் புனித நீராடல்

அலங்காநல்லூர்: அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் நடைபெறும் விழாக்களில் தைலக்காப்பு திருவிழா பிரசித்தி பெற்றதாகும். வருடந்தோறும் ஐப்பசி மாதம் அழகர்மலை அடிவாரத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மலைபாதை வழியே சென்று நுபுரகங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் புனித நீராடுவார். கடந்த 19ம் தேதி இந்த திருவிழா நவநீதகிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபதநாதன் சேவையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை கள்ளழகர் அழகர்மலை உச்சியில் நூபுரகங்கை தீர்த்ததொட்டியில் எழுந்தருளினார்.

பிற்பகல் 2மணிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மூலம் திருத்தைலம் சாத்தப்பட்டு நூபுரகங்கையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் நூபுரகங்கை தீர்த்தத்தில் மணிக்கணக்கில் நீராடினார். இந்த நிகழ்வில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : festival ,Thilakappu ,Nalluparganai Theertham ,
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...