×

அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருமங்கலம்: திருமங்கலம் அடுத்துள்ள பச்சகோபன்பட்டி கிராமத்திலுள்ள அய்யனார் கோயில் மகாகும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனையொட்டி நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கியது. புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை கோபூஜை, தீபலட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் சீனிவாசன் தலைமையிலான சிவாச்சாரியர்கள் குதிரைமீது அமர்ந்துள்ள அய்யனார் சிலை மற்றும் கும்பத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீரை கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

அப்போது கருடன் வானில் வட்டமிட்டதால் பக்தர்கள் கோஷமிட்டபடியே அய்யனாரை வணங்கினர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் பச்சகோபன்பட்டி, திரளி, ஆலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அய்யனார் மற்றும் பரிவார சாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

அலங்காநல்லூர் அருகே கீழசின்னணம்பட்டி கிராமத்தில் உள்ள பூஞ்சோனை கருப்புசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலையில் பூஞ்சோனை கருப்புசாமி, அக்கீனி வீரன், ஒய்யாண்டாள், வழநாட்டு முத்தையா, வாழ குருநாதன், கழுஞ்சமலை கருப்பு, இளமநாயகி உள்ளிட்ட தெய்வங்களின் திருக்கோவில் கும்பத்தில் பல்வேறு புன்னிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Kumbhabhishekam Temple ,devotees ,
× RELATED பாலத்தில் மோதி கார் நொறுங்கியது 4 பக்தர்கள் பரிதாப பலி