×

முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா – தென்ஆப்ரிக்கா மோதல்: காயத்தால் விலகினார் ராகுல்: கேப்டனாக பன்ட்

டெல்லி: இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி, டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.  முதல் போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து  கட்டாக் (ஜூன் 12), விசாகப்பட்டினம் (ஜூன் 14), ராஜ்கோட் (ஜூன் 17) மற்றும் பெங்களூருவில் (ஜூன் 19) போட்டிகள் நடக்க உள்ளன. இந்த 2 அணிகளுக்கு இடையிலான ஆட்டங்களில் அதிக ரன் எடுத்த கேப்டன் ரோகித் ஷர்மா (13 ஆட்டம், 362 ரன்),  அதிக விக்கெட் அள்ளிய அஷ்வின் (6 ஆட்டம், 10 விக்கெட்), கோஹ்லி , பும்ரா, ஷமி ஆகிய முன்னணி வீரர்களுக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித்துக்கு பதிலாக தலைமை ஏற்கவிருந்த கே.எல்.ராகுல் பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக  நேற்று திடீரென விலகியதை அடுத்து, இந்திய அணி ரிஷப் பன்ட் தலைமையில் களமிறங்குகிறது.   சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவும் காயம் காரணமாக விலகியுள்ளார். ஹர்திக் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். ஐபிஎல் தொடரில் கலக்கிய அதிவேகம் உம்ரான் மாலிக்,  ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். அதே தொடரில் அசத்திய சீனியர்கள் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்களுடன் சாஹல், புவனேஷ்வர், அர்ஷ்தீப், ஹர்ஷல், இஷான், வெங்கடேஷ், ஷ்ரேயாஸ் என பலரும் கலக்க காத்திருக்கின்றனர்.இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்க இருப்பதால், வீரர்கள்  தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றனர். அதே நெருக்கடி தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்க அணிக்கும் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர், டி காக், ரபாடா, வாண்டெர் டுசன், பிரிடோரியஸ், மார்கோ என பெரும்படை, நிச்சயம் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்….

The post முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா – தென்ஆப்ரிக்கா மோதல்: காயத்தால் விலகினார் ராகுல்: கேப்டனாக பன்ட் appeared first on Dinakaran.

Tags : India ,South Africa ,T20 ,Rahul ,Delhi ,Arun Jetley Stadium ,Dinakaran ,
× RELATED உலக கோப்பைக்கு தயாராவதில் தடுமாறும்...