×

தமிழில் வருகிறது பிரேமலு

சென்னை: கேரளாவில் மலையாளத்தில் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்திருக்கும் படம், ‘பிரேமலு’. கிரிஷ் ஏடி இயக்க, விஷ்ணு விஜய் இசை அமைத்திருக்கிறார். மமிதா பைஜூ, நஸ்லன் கே.கபூர் நடித்த இப்படத்துக்கான ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கி இருக்கிறது. தற்போது தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ள ‘பிரமேலு’ படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட படக்குழுவினர் தீர்மானித்தனர். வரும் 15ம் தேதி இப்படம் தமிழில் திரைக்கு வருகிறது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், கடந்த பிப்ரவரி 9ம் தேதி கேரளாவில் வெளியானது.

மலையாளத்தில் திரைக்கு வந்த ‘தண்ணீர் மத்தான் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த கிரிஷ் ஏடி, ‘பிரேமலு’ படத்தை இயக்கியுள்ளார். சிறப்பு வேடங்களில் மேத்யூ தாமஸ், ஷ்யாம் புஷ்கரன் நடித்திருக்கின்றனர். பஹத் பாசில், ஷ்யாம் புஷ்கரன், திலேஷ் போத்தன் தயாரித்த இப்படத்தில், காதலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

The post தமிழில் வருகிறது பிரேமலு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Malayalam ,Kerala ,Girish AD ,Vishnu Vijay ,Mamita Baiju ,Naslan K. Kapoor ,OTD… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கொல்லத்தில் பிரசாரத்தின் போது பா.ஜ வேட்பாளரின் கண்ணில் காயம்