×

J.பேபி: விமர்சனம்

கணவனை இழந்த பிறகு தனி மனுஷியாய் தனது 3 மகன்கள், 2 மகள்களை வளர்த்து ஆளாக்குகிறார், ஜெ.பேபி (ஊர்வசி). பிள்ளைகளால் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார், ஜெ.பேபி. அவரை சங்கர் மனநல மருத்துவமனை ஒன்றில் சேர்க்கிறார். ஆனால், அங்கிருந்து சிகிச்சை பெற பிடிக்காமல் கிளம்பும் ஜெ.பேபி, அம்பத்தூர் ரயிலில் ஏறுவதற்கு பதிலாக கொல்கத்தா ரயிலில் ஏறி ஹவுரா சென்றுவிடுகிறார். பிறகு அங்குள்ள தமிழ் ராணுவ வீரரால் கண்டுபிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்படுகிறார். இத்தகவல் மகன்களுக்கு சொல்லப்படுகிறது. எதிரெதிர் மனநிலையில் இருக்கும் மகன்கள், தாயை அழைத்து வர கொல்கத்தா செல்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

ஊர்வசி, மனப்பிறழ்வு கொண்ட முதிய பெண் ஒருவரை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். சட்டென்று தினேஷ் அவரை அடித்துவிட, மறுநிமிடமே அவருக்கு சோறூட்டி, ‘நான் உன்னை அடிக்கலையேப்பா. நீதானே என்னை அடிச்சே’ என்று சொல்லும் இடத்தில் அழவைத்து விடுகிறார். மகன்களாக நடித்துள்ள மாறன், தினேஷ் இருவரும் அண்ணன், தம்பியாகவே வாழ்ந்துள்ளனர். அதுபோல், படத்தில் வரும் சேகர் நாராயணன், தாட்சாயணி, இஸ்மத் பானு, சபீதா ராய், மாயா, மெலடி டார்கஸ் உள்பட அனைவரும் தங்கள் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர்.

டோனி பிரிட்டோ பின்னணி இசையும், ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவும் இயக்குனருடன் சேர்ந்து பயணித்து, கடைசிவரை கதையை நடத்த உதவியுள்ளன. ஊர்வசிக்கு அவ்வப்போது மனநலம் பாதிக்கும் என்ற நிலையில், நீண்ட தூர ரயில் பயணத்தில் அவர் தன்னை உணராமல் செல்வதில் லாஜிக் இடிக்கிறது. கொல்கத்தா அரசு காப்பகத்தில் அவர் ஆர்ப்பாட்டம் செய்து கத்துவதையும் குறைத்திருக்கலாம். சில குறைகள் இருந்தாலும், அழுத்தமான கதையைச் சொல்லி, தரமான இயக்குனராக தடம் பதித்துள்ளார் சுரேஷ் மாரி.

The post J.பேபி: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : J. Baby ,Urvashi ,Shankar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED J.பேபி