×

‘அக்கரன்’ படத்தில் கதையின் நாயகனாக மாறிய எம்.எஸ்.பாஸ்கர்

 

சென்னை: நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘அக்கரன்’. அவரது மகள்களாக ‘பள்ளிப் பருவத்திலே’ வெண்பா, பிரியதர்ஷினி நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் ‘கபாலி’ விஷ்வந்த், நமோ நாராயணன், ஆகாஷ், பிரேம் குமார், கார்த்திக் சந்திரசேகர் நடித்துள்ளனர். குன்றம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.கே.டி தயாரிக்க, எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஆர்.ஹரி இசை அமைக்க, அருண் கே.பிரசாத் எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது:

‘அக்கரன்’ என்றால் நிலையானவன், அழிக்க முடியாதவன், எங்கும் நிறைந்தவன், கடவுள் என்று பல அர்த்தங்கள் இருக்கின்றன. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த விவசாயி எம்.எஸ்.பாஸ்கரின் மகள்கள் வெண்பா, பிரியதர்ஷனி ஆகியோரில் ஒருவர் படிக்கிறார். இன்னொருவர் வீட்டில் இருக்கிறார். அப்போது ஒரு பெண் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இச்செயலை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். அவர்களை தன் புத்தி சாதுர்யத்தால் கண்டுபிடிக்கும் எம்.எஸ்.பாஸ்கர், தன் வயதுக்கே உரிய மெச்சூரிட்டியுடன் அவர்களை என்ன செய்கிறார்? பிறகு அப்பழியில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது கதை. தமிழ் சினிமாஸ் சார்பில் தனபால் கணேஷ், ஷிவானி செந்தில் ஆகியோர், வரும் மார்ச் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வருகின்றனர்.

The post ‘அக்கரன்’ படத்தில் கதையின் நாயகனாக மாறிய எம்.எஸ்.பாஸ்கர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : MS Bhaskar ,CHENNAI ,Venba ,Priyadarshini ,Kabali ,Vishwanth ,Namo Narayanan ,Akash ,Prem Kumar ,Karthik Chandrasekhar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘பார்க்கிங்’ படம் பாணியில் கவனம்...