×

45 வருஷமா ‘விக்’காலதான் வண்டி ஓடிக்கிட்டிருக்கு: சத்யராஜ் கலகல

சென்னை: வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள படம், ‘சிங்கப்பூர் சலூன்’. இதில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி சவுத்ரி, லால், ரோபோ சங்கர், தலைவாசல் விஜய் ஆகியோருடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஜீவா கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, கோகுல் இயக்கியுள்ளார். விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளனர். வரும் 25ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சத்யராஜ் கலகலப்பாகப் பேசியதாவது: சிகை அலங்காரம் என்பது ஒரு மனுஷனுக்கு ரொம்ப முக்கியம். 45 வருஷமா ‘விக்’காலதான் என் வண்டி ஓடிக்கிட்டிருக்கு. எம்.ஜி.ஆர், விஜயகாந்த் உள்பட நிறைய ஹீரோக்கள் அந்தந்த காலக்கட்டத்துக்கு தகுந்த மாதிரி ஹேர்ஸ்டைலை மாற்றி நடிச்சாங்க. நான் வில்லனா இருந்து ஹீரோவா நடிச்சேன். அப்ப சில படங்கள்ல கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டப்ப ரொம்ப தயங்கினேன். கஷ்டப்பட்டு ஹீரோவாகி இருக்கோம்.

அந்த இடத்தை சின்ன, சின்ன கேரக்டர்ல நடிச்சு கெடுத்துக்கணுமான்னு யோசிச்சேன். அப்ப எனக்கு விஜய் சேதுபதியை பார்த்து தைரியம் வந்தது. அவரை இன்ஸ்பிரஷேனா நினைச்சி, நாமும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறதுல தப்பிலன்னு உணர்ந்தேன். காமெடி பண்ணிக்கிட்டிருந்த மனோரமாவுக்கு திடீர்னு ‘சின்னக்கவுண்டர்’, ‘சின்னத்தம்பி’, ‘நடிகன்’, ‘கிழக்கு வாசல்’ போன்ற படங்கள் கிடைச்சி, குணச்சித்திரமும் அவருக்கு வரும்னு நிரூபிச்சது. எனக்கு நக்கல், நையாண்டித்தனம் பண்ண வரும். ஹீரோவா நிறைய படங்கள் பண்ணிட்டேன். கவுண்டமணி, மணிவண்ணன், வடிவேலு இவங்க கூட சேர்ந்து காமெடி பண்ணியிருக்கேன்.

ஆனா, நான் தனியா காமெடி பண்ண படம்னா, அது ‘சிங்கப்பூர் சலூன்’தான். இந்த படம் எனக்கு வேற ஒரு கதவை திறந்துவிட்டிருக்கு. ஒரு ஹீரோவுக்கு டைரக்டர் இடம் கொடுத்து நடிக்க வெச்சாத்தான், அந்த நடிகருக்கு வேற ஒரு பரிமாணம் கிடைக்கும். ‘காக்கி சட்டை’யில நான் ‘தகடு’ டயலாக்கை ஒருமுறை மட்டுமே பேசியிருந்தா, சத்யராஜ் ஸ்டைலுன்னு ஒண்ணு இல்லாமலே போயிருக்கும். ‘தகடு… தகடு… தகடு’ன்னு நான் பேசியதை அந்த டைரக்டர் ஓ.கே சொன்னதாலதான், அதை வெச்சு இவ்வளவு காலமும் வண்டி ஓடிக்கிட்டிருக்கு. கட்டப்பா சத்யராஜ் போயி, இனிமே சக்ரபாணி சத்யராஜ் பற்றி பேசுவாங்க. அந்தளவுக்கு ‘சிங்கப்பூர் சலூன்’ படம் என் கேரக்டரை மாற்றியிருக்கு.

The post 45 வருஷமா ‘விக்’காலதான் வண்டி ஓடிக்கிட்டிருக்கு: சத்யராஜ் கலகல appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Satyaraj Kalakala ,Chennai ,Isari K. Ganesh ,Wales Film International ,RJ Balaji ,Sathyaraj ,Meenakshi Chowdhury ,Lal ,Robo Shankar ,Thalivasal Vijay ,Lokesh Kanagaraj ,Jeeva Kaurava ,Sathyaraj Kalagala ,Kollywood News ,Kollywood ,
× RELATED ஜெயம் ரவியின் ஜீனி செகண்ட்லுக் வெளியீடு