×

கலவரத்தால் மாணவர்கள் பள்ளிக்கு போகவில்லை: மணிப்பூர் மாணவி கண்ணீர்; கார்த்தி உருக்கம்

சென்னை: சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 45ம் ஆண்டு நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழை மாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், மூத்த ஓவிய கலைஞர் மாயா என்ற ஜி.ஆர்.மகாதேவனுக்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது.

விழாவில் கார்த்தி பேசும்போது, ‘இந்த மேடையில் மணிப்பூரில் இருந்து வந்த தங்கை கண்கலங்கி பேசியது ரொம்ப வேதனையாக இருந்தது. எங்கள் ஊரில் கலவரம் நடக்கிறது. எங்க ஊரில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதனால் நிறைய குழந்தைகள் ஸ்கூலுக்கும் கல்லூரிக்கும் போக முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே அனைவரும் இருக்கிறோம். நான் அதிர்ஷ்டவசமாக இங்கே வந்ததால் படித்துக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து எங்கள் ஊருக்காக பிரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள்.

எங்கள் ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு மறுபடியும் வெளியேயும் பள்ளிக்கும், கல்லூரிக்கும் போக வழி வகுங்கள் என்று கூறினார். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு நாம் எல்லாம் அந்த சூழலை யோசித்து பார்க்க வேண்டும். யாராவது கல்வி உதவி என்று கேட்டால் உதவி செய்யுங்கள். பணமாக இல்லாமல் பள்ளியிலேயே போய் பணத்தை கட்டி விடுங்கள். அது நாம் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்’ என்றார். சிவகுமார், சூர்யா கலந்துகொண்டனர்.

The post கலவரத்தால் மாணவர்கள் பள்ளிக்கு போகவில்லை: மணிப்பூர் மாணவி கண்ணீர்; கார்த்தி உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Karthi Urukkam ,Chennai ,Sivakumar Education Foundation ,Taitamil School ,Tindivanam Education Development Committee ,Manipur ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...