×

360 டிகிரி மேடையில் யுவன் சங்கர் ராஜா

சென்னை: யுவன் சங்கர் ராஜா இப்போது ‘யூ1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் பெயரில் சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் எனும் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது. பூமர் ஃபேஷன் இணைந்து வழங்குகிறது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மகாவீர் மற்றும் கார்த்திக் சீனிவாஸ், பூமர் ஃபேஷன் நிறுவனத்தின் தலைவர் லிங்குசாமி மற்றும் ஹரிதா லிங்குசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனத் தலைவர் மகாவீர் பேசுகையில், ‘முதன் முறையாக இந்தியாவில் 360 டிகிரி வடிவிலான மேடையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கும், யுவனுக்கும் இடையேயான நெருக்கம் மேலும் அதிகமாகும்’ என்றார். யுவன் சங்கர் ராஜாவுடன் பின்னணி பாடகர்கள் ஆண்ட்ரியா, ஹரி சரண், பிரேம் ஜி, ராகுல் நம்பியார், ஹரிப்பிரியா, திவாகர், ரிஷா, ஆதித்யா, ஸ்ரீநிஷா, எம் சி சனா என ஏராளமான முன்னணி பின்னணி பாடகர்கள் பாடுகிறார்கள்.

The post 360 டிகிரி மேடையில் யுவன் சங்கர் ராஜா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yuvan Shankar Raja ,CHENNAI ,U1 ,in Concert ,Nandanam YMCA ,Noise ,Cryins ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வாடகை பாக்கி விவகாரம் தொடர்பாக யுவன்...