×

கைதி உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு பேரவையில் தெரிவிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்துள்ள தட்டரனை கிராமத்தில் வாழும் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் சாராய விற்பனை வழக்கில் கடந்த 26ம் தேதி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உயிரிழந்ததற்கு காவல்துறையினர் தாக்கியதே காரணம் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் செய்ய சென்றபோது, அங்கிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும், கடுமையான வாக்குவாதத்திற்கு பிறகு அனுமதிக்கப்பட்டதாகவும் இறந்தவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். மர்மமான முறையில் இறந்த, மலைவாழ் வகுப்பைச் சேர்ந்த ஏழ்மை நிலையிலுள்ள தங்கமணியின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி அளித்திட வேண்டும். இவ்வழக்கை நேர்மையான முறையில் விசாரணை நடத்திட உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்’’ என்றார். இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தட்டரனை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி அவரது வீட்டில் விஷச்சாராயம் வைத்திருந்ததாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கடந்த    26ம் தேதி அவரை கைது செய்து அன்றைய தினமே திருவண்ணாமலை கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இந்த நிலையில், சிறையிலிருந்த தங்கமணிக்கு ஏப்ரல் 27 அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவு சுமார் 7.40 மணிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமணி சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 8.40 மணியளவில் உயிரிழந்துள்ளார். தங்கமணியின் உடற்கூராய்வு நடைபெற்றுள்ளது. அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், உரிய விசாரணை நடத்தப்பட்டு, இந்த அவைக்குத் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்….

The post கைதி உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு பேரவையில் தெரிவிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Edappadi K. Palanichami ,Legislative Assembly ,Thiruvannamalai district ,Thandarambat ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...