×
Saravana Stores

பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாடுகளை களைய நெடுஞ்சாலை துறையில் ‘உள்தணிக்கை’ நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை: தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:சமீபத்திய ஒன் இண்டியா இணையதள சேவையில், கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் சில சாலை பணிகள் நிறைவு செய்யப்படுவதற்கு முன்னரே ஒப்பந்த தொகை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கியதாக செய்திகள் வெளிவந்தது. அந்த செய்தியினை தொடர்ந்து முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 2 கோட்ட பொறியாளர்கள், 2 உதவி கோட்ட பொறியாளர்கள், 2 உதவி பொறியாளர்கள் மற்றும் 2 கோட்ட கணக்கர்கள் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆர்.கோதண்டராமன் விசாரணை அலுவலராக நியமனமிக்கப்பட்டுள்ளார்.மேலும் ‘உள்தணிக்கை’ என்ற புதிய திட்டம் நெடுஞ்சாலைத்துறையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகை சார்ந்த 9 வட்டங்கள், நபார்டு மற்றும் கிராம சாலை அலகை சார்ந்த 4 வட்டங்களில் செயல்படுத்தப்படும் அனைத்து பணிகளையும், பிற அலகுகளான தேசிய நெடுஞ்சாலைகள், திட்டங்கள். பெருநகரம் (மெட்ரோ),நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-II,சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டம் சார்ந்த கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையிலான குழு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரத்தில், உள்தணிக்கை செய்து அறிக்கையை முதன்மை இயக்குனர் நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாடுகளை களைய நெடுஞ்சாலை துறையில் ‘உள்தணிக்கை’ நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,AV Velu ,Chennai ,Minister of Public Works ,Highways ,Minor Ports ,Tamil Nadu ,AV ,Velu ,Chief Secretariat ,
× RELATED விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று...