×

காவலர் குறைதீர் சிறப்பு முகாம்; 282 மனுக்கள் மீது நடவடிக்கை: கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை, நவ.6: காவலர்களுக்கான குறைதீர் சிறப்பு முகாமில் 282 மனுக்களை பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தலைமையில், காவலர்கள் குறைதீர் முகாம், வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நேற்று நடந்தது. இதில், கிழக்கு மண்டலத்தில் (திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் காவல் மாவட்டங்கள்) பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து 282 மனுக்களை கமிஷனர் அருண் பெற்றார்.

இதில், பணியிட மாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட 282 மனுக்களை பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். முகாமில், சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையர் (தலைமையிடம்) கபில்குமார் சி சரத்கர், இணை ஆணையர்கள் சரோஜ்குமார் தாகூர், (கிழக்கு மண்டலம்) கயல்விழி (தலைமையிடம்), துணை ஆணையர்கள் மேகலீனா ஐடன் (தலைமையிடம்), அதிவீரபாண்டியன் (நிர்வாகம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post காவலர் குறைதீர் சிறப்பு முகாம்; 282 மனுக்கள் மீது நடவடிக்கை: கமிஷனர் அருண் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Police Grievance Special Camp ,Commissioner ,Arun ,Chennai ,Police Commissioner ,Special Grievance Camp ,Chennai Metropolitan ,Police Grievance Camp ,Vepperi ,Gupta Grievance Special Camp ,Dinakaran ,
× RELATED குறை தீர்க்கும் முகாமில் மக்களிடம்...