×

வழிப்பறி செய்த மாணவன் கைது

திருவொற்றியூர், நவ.10: கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (22). சென்னை திருமங்கலத்தில் தங்கி, ராபிடோ பைக் டாக்சி ஓட்டி வருகிறார். இவர், நேற்று அதிகாலை 2 மணிக்கு வாடிக்கையாளரை பிக்கப் செய்வதற்காக, மாதவரம் ரவுண்டானா அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை, மற்றொரு பைக்கில் வந்த 3 பேர், சீனிவாசனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் 2 வெள்ளி மோதிரங்களை பறித்து சென்றனர். இதுகுறித்து மாதவரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார், அதே பகுதியில் திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், சின்ன மாத்தூரை சேர்ந்த அருண்குமார் (21), திலீப் (24), ஈஸ்வர் (21) என்பதும், இவர்கள் சீனிவாசனிடம் வழிப்பறி செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கைதான திலீப், மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பவர் என்பதும், அருண்குமார், ஈஸ்வர் ஆகியோர் மீது மாதவரம் பால் பண்ணை மற்றும் மாதவரம் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்தது.

The post வழிப்பறி செய்த மாணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur ,Sinivasan ,Kummidipundi ,CHENNAI THIRUMANGALA ,RAPIDO ,Dinakaran ,
× RELATED எண்ணூர் அருகே உயர் மின்னழுத்த கம்பி...