×

இரட்டை இலை லஞ்ச வழக்கு டிடிவி.தினகரனுக்கு மீண்டும் ‘அழைப்பு’: அமலாக்கத் துறை 2ம் கட்ட விசாரணை

புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் வரும் 21ம் தேதி மீண்டும் ஆஜராக டிடிவி.தினகரனுக்கு அமலாக்கத் துறை நேற்று 2வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இந்திய தலைமை  தேர்தல் ஆணையத்தில் இருந்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு பெறுவதற்காக பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் கடந்த 2017ம் ஆண்டு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடைத்தரகர் சுகேஷிடம்  வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த வாரம் டி.டி.வி.தினகரனிடம் நள்ளிரவு வரையில் 12 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லியில் விசாரணை நடத்தினர். இந்நிலையில், விசாரணைக்காக  வரும் 21ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத் துறை 2வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. …

The post இரட்டை இலை லஞ்ச வழக்கு டிடிவி.தினகரனுக்கு மீண்டும் ‘அழைப்பு’: அமலாக்கத் துறை 2ம் கட்ட விசாரணை appeared first on Dinakaran.

Tags : TTV.Thinakaran ,Enforcement Department ,New Delhi ,TTV.Dinakaran ,
× RELATED ஜாமீன் நீடிப்பு கெஜ்ரிவால் மனு மீது நாளை விசாரணை