×

நவம்பர் 7ல் கமல், மணிரத்னம் பட டீசர்

சென்னை: கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து ‘நாயகன்’ படத்தில் பணிபுரிந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இருவரும் இணைய உள்ள படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வந்தது. ‘கமல்ஹாசன் 234’ என்ற இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்த முக்கிய அப்டேட்டை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். ‘மணிரத்னம் இயக்கத்தில் நான் நடிக்க இருக்கும் படத்தின் டீசர் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகிறது, இந்த டீசர் நவம்பர் 7ம் தேதி உங்கள் பார்வைக்கு வைக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ‘கமல் 234’ படத்தின் டீசர் நவம்பர் 7ம் தேதி கமலின் பிறந்த நாளில் வெளியாகும் என்பது உறுதி ஆகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த படத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கின்றன. அடுத்த ஆண்டு முதல் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

The post நவம்பர் 7ல் கமல், மணிரத்னம் பட டீசர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Kamal Haasan ,Mani Ratnam ,Kamal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு...