×

அஜித் குமார் படத்தில் ரெஜினா

‘கண்ட நாள் முதல்’ படத்தில் அறிமுகமானவர், ரெஜினா. பிறகு பல படங்களில் நடித்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையானார். இடையிடையே தமிழ்ப் படங்களில் நடித்தார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அறிவிக்காவிட்டாலும், ரெஜினா இதை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இத்தனை பெரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு எனது ‘விடாமுயற்சி’தான் காரணம் என்று சொல்வேன். இனி தொட்டதெல்லாம் ஹிட்தான்.

கதைகளை தேர்வு செய்யும் வாய்ப்பு பெரும்பாலான ஹீரோயின்களுக்கு கிடைப்பது இல்லை. எனினும், எனது கதாபாத்திரத்தை அதிக கவனத்துடன் தேர்வு செய்து நடிக்கிறேன்’ என்றார். ஏற்கனவே சில படங்களில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்திருக்கும் அவர், ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் குமார் கேங்கில் லேடி கேப்டன் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தனது உடம்பை ஸ்லிம்மாக்க, ரெஜினா தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

The post அஜித் குமார் படத்தில் ரெஜினா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Regina ,Ajit Kumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்