×

ஐக்கிய அமீரக அரபு நாடுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்தும் முதல்வருக்கு அழைப்புகள் வருகின்றன: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: ஐக்கிய அமீரக அரபு நாடுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தேவையையும் கால சூழ்நிலையையும் பொறுத்து அந்த வாய்ப்புகளை தமிழக தொழில்துறை பயன்படுத்தும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் இதுவரை 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இரண்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய காலனி தொழிற்சாலையை நாளை (இன்று) திண்டிவனத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ஐக்கிய அமீரக அரபு நாடுகளை தொடந்து பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழக முதல்வருக்கு அழைப்பு வந்துள்ளது. சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்து தமிழகத்திற்கு வரும் வாய்ப்புகளை தமிழக தொழில்துறை பயன்படுத்தும்.எலக்ட்ரிக் பைக், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கிறது, அதேபோல வெளிநாட்டுவாழ் தமிழர்களும் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கின்றன, ஒரு நிலையான தொழில் செய்வதற்கான மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்….

The post ஐக்கிய அமீரக அரபு நாடுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்தும் முதல்வருக்கு அழைப்புகள் வருகின்றன: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : United Arab Emirates ,Minister Thangam ,South Korea ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,South ,Kingdom ,Dinakaran ,
× RELATED வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம்...