×

பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வேலை வழங்க டிடிவி வலியுறுத்தல்

சென்னை:  பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன். அடிப்படையில் விளையாட்டு வீரர்களாக இருக்கும் அவர்களுக்கு மீண்டும் ஒரு எழுத்து தேர்வு வைப்பது பொருத்தமில்லாததாகும். தமிழகம் முழுவதும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிறைய காலியாக இருக்கும் நிலையில் அரசு தாமதமின்றி முடிவெடுத்து செயல்படவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்….

The post பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வேலை வழங்க டிடிவி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DTV ,Chennai ,TTV ,Dinakaran ,Tamil Nadu government ,Amamuka Public ,
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...